வீரபாண்டிய கட்டபொம்மன்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgHxgD0ZeHzys_bM7GjBa_b_31s3z0deVZb-PslKtWjhjMITWI469_2qsZaCfY4MRHpTm3bewqaVlmIOcVhAAbeg50-zTT0O2na-jZG6POzpZ5iNUATROOVT2oibKEg0YdpFNfmNhC7OSq/s640/FB_IMG_1495928260591.jpg)
வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர். கட்டபொம்மன் பெயர் காரணம் அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபா...