அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்
(மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்) நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவர் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதினனாக இருந்ததால் இவரது தாய் மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினார்.