இராணி மீனாட்சி
இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவராவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி. அவருக்கு குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தார்.
அம்மையநாயக்கனூர் போரில் தோற்ற ராணி மீனாட்சியை, சந்தா சாகிப்பின் படைவீரர்கள் கைது செய்ததால், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவருடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது