நாயக்கர்களின் பூர்வீகம்
இவர்கள் ஆந்திரம் கர்நாடகம் எல்லையில் துங்கபத்திர நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி என்னும் நகரத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளனர் . இவர்கள் தெலுங்கு , தமிழ் கன்னடம் கலந்த மொழியில் பேசுவர் . பெரும்பாலும் தெலுங்கு வார்த்தைகளை கொண்டு தான் இருக்கும் . இவர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துகொண்டு இருந்தநிலையில் இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்களிடம் பெண்கேட்டு வந்ததாகவும் அதனால் தமிழகம் நோக்கி வந்தனர் என்று இவர்கள் கூறுகிறார்கள் . இவர்கள் மேற்கு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர் . கொங்கு நாடு மற்றும் மேற்கு மதுரை பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டனர் இதில் தெலுங்கு பேசும் நாயுடு ரெட்டி கம்பளத்தார் தொட்டியர் என்றும் கன்னடம் பேசும் அனுப்பர் ஒக்கில்லியர் காப்பில்லியர் குரும்பர் ஆகிய கம்பளகவுண்டர்கள் அட்டியர் என்றும் தங்கள் பட்டிக்கு பெயரிட்டு வாழ்ந்து வந்தனர் இதில் அனுப்பகவுண்டர்கள் தமிழ்நாட்டில் 60 க்கும் மேற்பட்ட அரண்மனைகளை கட்டி ஆண்டனர் அப்படி ஆண்ட அரண்மனைகளில் ஒன்று வெள்ளியங்குன்றம் அரண்மனை அந்த ஜமீன் பரம்பரை அன்றிலிருந்து இன்றுவரை மதுரை அழகர் கோவில் ஆபரண பாதுகாப்பு பணியைச் செய்து வருகிறது கம்பளத்தார்களின் தலைமை ஸ்தானமாக இருந்தவர்கள் ஸ்ரீஒன்னம்மாள் தொட்டராயர் ஆகும் இவர்களே அனுப்பகவுண்டர்களின் குல தெய்வம் கம்பளத்தார்களின் அடையாளம் உருமிமேளம் இலந்தமுள் கோட்டை மங்களபாடல் நடுகல் வழக்கம் கருப்பு தாலிகயிறு ஆகும்