கம்மம் கோட்டை, கம்மம்
கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின்
ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது
ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை.
அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள்
இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர். மேலும், பின்னாளில் 1531ம்
ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய
மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர்.
ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த
கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த
மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே
இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு
குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.
கம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு
முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம்
மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது.