புவனகிரி கோட்டை, நல்கொண்டா

திரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையின் உள்ளே அதன் இரண்டு வாசல்கள் வழியாக நுழையலாம். கோட்டையைச்சுற்றி ஆழமான அகழியும் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ளே பாதாள அறைகள், நீண்ட கூடங்கள், ரகசியச்சுரங்கப்பாதைகள், ரகசிய ஆயுத அறைகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்றவை காணப்படுகின்றன. கோட்டையின் மேல் அடுக்கில் இரண்டு குளங்கள் மற்றும் ஆழமான கிணறுகள் போன்றவையும் நீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோட்டையின் உச்சிக்கு இருண்ட படிப்பாதை மூலமாகவோ அல்லது வளைந்து வளைந்து செல்லும் செங்குத்தான பாதை மூலமாக சென்றடையலாம். சாகச சுற்றுலாப்பிரியர்களுக்கு இந்த கோட்டை ஸ்தலம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

Popular posts from this blog

நாயக்கர் குல தெய்வம்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

நாயக்கர் வரலாறு

நாயக்கர் வாழும் பகுதிகள்

ராஜகம்பளத்து நாயக்கர்

கோபால் நாயக்கர்

குமார கம்பணன்

ஜக்கம்மா வரலாறு